தெலங்கானாவைச் சேர்ந்த புஷ்பல சுரேஷ், இவரது மனைவி ஸ்ரீலதா மற்றும் பிள்ளைகள் அகில், ஆஷிஷ் ஆகியோர் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டனர். இதில் 2 பேர் விஷம் குடித்தும், 2 பேர் நதியில் மூழ்கியும் தற்கொலை செய்துள்ளனர். ஸ்ரீலதா, ஆஷிஷ் ஆகியோர் உடல்கள் ஹோட்டல் அறையில் இருந்தும், சுரேஷ், அகில் உள்ளிட்ட உடல்கள் கிருஷ்ணா நதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாணையில், இவர்கள் கடன் தொல்லையால் தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கடந்த ஜனவரி 6ஆம் தேதி கனகதுர்க்காதேவி கோவிலில் தரிசனத்திற்காக விஜயவாடாவுக்கு சென்ற குடும்பம், ஸ்ரீ கன்னிகா சௌல்ட்ரியில் வந்திருந்ததாக காவல் உதவியாளர் ஒருவர் தெரிவித்தார். இவ்வாறு தற்கொலை செய்து கொண்ட சுரேஷ் மெடிக்கல் ஷாப் நடத்தி வந்ததும், மகன்கள் பெட்ரோல் பம்ப் குத்தகைக்கு எடுத்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து அவர்களது உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.