தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் ஒமைக்ரான் வைரசும் மிக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தியுள்ளது.மேலும் இரண்டு டோஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்த வேண்டும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தெற்கு ரயில்வே சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. அதாவது சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளுக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் பயணிக்க 2 டோஸ் தடுப்பூசி கட்டாயமாக செலுத்தி இருக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் மற்றும் அடையாள அட்டைகளை காட்டினால் மட்டுமே பயணச் சீட்டு வழங்கப்படும். அவ்வாறு கொண்டு வரவில்லையென்றால் அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அதனைத் தொடர்ந்து சென்னை மின்சார ரயில்களில் 50% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பயணிகள் முக கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். மேலும் UTS செயலி மூலம் முன்பதிவு செய்யும் வசதி நாளை மறுநாள் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவுள்ளது என்று தெரிவித்துள்ளது.