Categories
மாநில செய்திகள்

காங்கிரசை வெட்டி விருந்து வைத்த பாஜக… மதுரையில் சம்பவம்…..!!!!

காங்கிரஸ் கட்சி பெயர் வைத்து கோவிலில் ஆடு வெட்டி விருது வைத்து பாஜகவினர் நூதன போராட்டம் நடத்தினர். பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சியில் பிரதமர் மோடிக்கு போதிய பாதுகாப்பு வழங்கவில்லை என்று பாஜகவினர் மதுரையில் நூதன போராட்டத்தை நடத்தினர். பஞ்சாப் சென்ற பிரதமர் மோடி பாதுகாப்பு காரணமாக மீண்டும் டெல்லி திரும்பிய சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியது.

இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் தான் காரணம் என்று குற்றம் சாட்டி மதுரை பாண்டி கோவிலில் ஆட்டிற்கு காங்கிரஸ் என பெயர் சூட்டி பாஜகவினர் வெட்டியுள்ளனர். அதன் பிறகு அதை விருந்து வைத்து சாப்பிட்டனர். இதனை மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர். இது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |