கரூர் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தனது டுவிட்டர் பக்கத்தில் “வந்த பிறகு எதிர்த்து நின்று திரும்பி போக வைப்பது ஒரு விதம்! வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொரு விதம்! தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச் செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்! என்று டுவிட் போட்டுள்ளார். இந்த டுவிட் பதிவால் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அதாவது பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் சென்ற போது திடீரென விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அவருடைய பயணத்தை தொடர முடியாமல் பாதியிலேயே திரும்ப நேரிட்டது.
அதேபோல் பிரதமர் மோடி மருத்துவக் கல்லூரியை தொடங்கி வைப்பதற்காக தமிழகத்திற்கு வருகை தருவார். அப்போது ‘மோடி பொங்கல்’ கொண்டாடலாம் என்று பாஜகவினர் எதிர்பார்த்து கொண்டிருந்தனர். ஆனால் அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழக அரசு ஒமிக்ரான் பரவல் காரணமாக கட்டுப்பாடுகளை அறிவித்தது. எனவே பாஜக நடத்த இருந்த ‘மோடி பொங்கல்’ நிகழ்ச்சியும் ரத்து செய்யப்பட்டது. அதனையே மறைமுகமாகக் குறிப்பிட்டு ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.