ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை அன்புமணி ராமதாஸ் வரவேற்பதாக கூறியுள்ளார்.
மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கான அகில இந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்புக்கு பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வரவேற்பளித்துள்ளார்.
இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்உயர்வகுப்பு ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு நடப்பாண்டுக்கு மட்டும் செல்லும் என்று தீர்ப்பு அளித்துள்ள உச்சநீதிமன்றம், 27% ஓபிசி இட ஒதுக்கீடு இறுதி செய்யப்பட்டுவிட்ட ஒன்று என்றும், 10% இட ஒதுக்கீட்டின் செல்லுபடியாகும் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பு வரவேற்கத்தக்கதாகும்.அகில இந்திய தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை உறுதி செய்து உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு சமூகநீதி வரலாற்றில் மிக முக்கியமான மைல்கல் ஆகும். இதன்மூலம் அகில இந்திய தொகுப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு அசைக்க முடியாத அளவுக்கு வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான சமூக நீதி பயணத்தை தொடங்கி வழிநடத்தியது பா.ம.க. என்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என்று கூறினார்.
இந்தியா விடுதலையடைந்து 40 ஆண்டுகள் வரை பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு சமூக நீதி வழங்கப்படவில்லை. விடுதலைக்குப் பின் 44 ஆண்டுகள் கழித்து 1990-ஆவது ஆண்டில் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான அரசு, மண்டல் ஆணையத்தின் பரிந்துரையில் ஒரு பகுதியை மட்டும் நடைமுறைப்படுத்தும் வகையில் மத்திய அரசின் வேலைவாய்ப்பில் மட்டும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதன்பின்னர் 16 ஆண்டுகள் கடந்த கொதித்தெழுந்த பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அவர்கள், 2006-ஆம் ஆண்டு மே மாதம் 23-ஆம் நாள் டில்லியில் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பேசியதன் பயனாகவே மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு சாத்தியமானது. அதை சாத்தியமாக்கிய பெருமை முழுக்க முழுக்க ராமதாஸ் அவர்களையே சேரும் என்கிறார்.சமூகநீதிக்கான பயணம் மிக நீண்டது.எனவும் அதற்காக நாம் கடக்க வேண்டிய தொலைவு இன்னும் அதிகம் என்று கூறினார்.