Categories
பல்சுவை

எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களே….ATM கார்டு PIN நம்பர் உருவாக்க எளிய வழி இதோ….!!!!

இந்தியாவின் முன்னணி பொதுத் துறை வங்கி நிறுவனமான ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. அதில் இணைய வசதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதில் வங்கி டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஏதேனும் தவறான இடங்களில் செலுத்துதல் அல்லது இது போன்ற சிக்கல்கள் ஏற்பட்டால் உடனடியாக ஒரு தொலைபேசி அழைப்பின் மூலம் தங்கள் டெபிட் கார்டு பின்னை உருவாக்க முடியும்.

வாடிக்கையாளர்கள் இந்த சேவைகளை தங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்தும், பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணில் இருந்தும் கூட பெற்றுக்கொள்ளமுடியும். இதுபற்றி எஸ்பிஐ வங்கி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், எங்கள் கட்டணமில்லா IVR அமைப்பு மூலம் உங்கள் டெபிட் கார்டு பின் அல்லது கிரீன் பின்ணை உருவாக்குவதற்கான எளிய வழிமுறைகளை கடைபிடிக்கவும். சிக்கல் ஏற்பட்டால் தயங்காமல் 1800 1234 என்று என்னை அழைக்கவும் என்று அதில் குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் எஸ்பிஐ வங்கி டெபிட் கார்டு பின் அல்லது கிரீன் பின்னை IVR- ல் நேரில் தொடர்பு மையம் மூலம் உருவாக்குவதே சுலபமாக்கியுள்ளது.

அவ்வாறு செய்ய, வாடிக்கையாளர்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து 1800-11-22-11 அல்லது 1800-425-3800 என்ற கட்டணமில்லா எண்ணுக்கு டயல் செய்ய வேண்டும். இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்ட பிறகு ஏடிஎம் டெபிட் கார்டு தொடர்பான சேவைகளுக்கு வாடிக்கையாளர் 2-ஐ அழுத்தவேண்டும். இதையடுத்து பின் என்னை உருவாக்க 1-ஐ அழுத்த வேண்டும். ஒரு வாடிக்கையாளர் தனது பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து அழைத்தால் 1-ஐ அனுப்ப வேண்டும் அல்லது ஒரு ஏஜென்டிடம் பேச வேண்டும் அதுவே பதிவு செய்யப்பட்ட மொபைலில் இருந்து அழைத்தால் 1-ஐ அழுத்திய பின் எஸ்பிஐ வாடிக்கையாளர் விரும்பும் பின்னை உருவாக்க ஏடிஎம் கார்டு கடைசி 5 இடங்களில் உள்ளிட வேண்டும்.

மீண்டும் கடைசி 5 இலக்கணங்களை உறுதிப்படுத்த 1-ஐ அழுத்து வேண்டும். அதன்பிறகு ஏடிஎம் கார்டுகளை மீண்டும் உள்ளிட வேண்டும். இதை செய்த பிறகு ஒருவர் தனது எண்ணின் கடைசி 5 இழக்கங்களை உள்ளிட வேண்டும். பின்னர் எஸ்பிஐ வாடிக்கையாளர் கடைசி 5 இலக்கங்களை உறுதிப்படுத்த 1-ஐ அழுத்த வேண்டும். இதையடுத்து கணக்கு எண்ணின் கடைசி 5 இலக்கங்களை மீண்டும் உள்ளிட 2-ஐ அழுத்தவேண்டும். இப்போது பிறந்த வருடத்தை உள்ளிட்டால் கிரீன் பின் வெற்றிகரமாக உருவாக்கப்படும். தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணின் அனுப்பப்பட்ட பின்னை 24 மணி நேரத்திற்குள் ஏதேனும் எஸ்பிஐ ஏடிஎம் சென்று மாற்ற வேண்டும். இதற்கிடையில் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுடன், IVR இணைக்கப்பட்டிருந்தால் தொலைத்தொடர்பு மாற்றம் என்பதையும் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டும்.

Categories

Tech |