நாடு முழுவதும் உருமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் அதி வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து மாநில அரசுகள் கட்டுப்பாட்டை தீவிரப்படுத்தி வருகிறது. இந்த நிலையில் அசாம் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது. இந்தக் கட்டுப்பாடுகள் இன்று முதல் அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் முன்பு இரவு 11:30 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்த ஊரடங்கு, இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை நீட்டிக்கப்படுகிறது.
மேலும் அத்தியாவசிய சேவைகள், அலுவலகங்களில் இரவுநேர பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் மதுபான கூடங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உணவகங்களில் 50 சதவிகித வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் கட்டுப்பாட்டை மீறி தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அனுமதிக்கும் மால்கள், உணவகங்களுக்கு 25,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் மாநில அரசு எச்சரித்துள்ளது.