Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே…! நம்பர் 1 வீரருக்கே “இந்த நிலைமையா”…? வசமாக சிக்கிய ஜோகோவிச்…. தடை விதித்த பிரபல நாடு…!!

உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரரான செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று ஆஸ்திரேலிய அரசாங்கம் விமான நிலையத்தில் வைத்தே தடுத்து நிறுத்தியுள்ளது.

செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் உலகின் நம்பர்-1 டென்னிஸ் வீரராக திகழ்கிறார். இவர் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள ஓபனில் பங்கேற்க அந்நாட்டிற்கு வந்துள்ளார்.

ஆனால் இவரை ஆஸ்திரேலியாவின் எல்லை பாதுகாப்பு படையினர்கள் கொரோனா தொடர்பான எந்தவித ஆவணங்களும் இல்லை என்ற காரணத்தினால் விமான நிலையத்திலேயே தங்கள் நாட்டிற்குள் நுழைய கூடாது என்று தடுத்து நிறுத்தியுள்ளார்கள்.

இதனையடுத்து ஜோகோவிச்சினுடைய நுழைவு விசா ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் மெல்போர்னிலுள்ள ஹோட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில் ஜோகோவிச்சை வருகின்ற திங்கட்கிழமை வரை நாடு கடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் கூறியதாவது, எல்லை பாதுகாப்பு படை வீரர்கள் ஜோகோவிச் கொரோனா விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக தகுந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |