சுவிட்சர்லாந்து அரசு, இனிமேல் ராணுவ வீரர்கள் வாட்ஸ்அப், டெலிகிராம் மற்றும் சிக்னல் போன்ற இணையதளங்களை உபயோகிக்க தடை விதித்திருக்கிறது.
சுவிட்சர்லாந்து மக்கள் வாட்ஸ்அப்-ஐ தான் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு ராணுவ வீரர்களுக்கு இவ்வாறு தடை அறிவித்திருக்கிறது. அதாவது, ராணுவ வீரர்கள் தங்களுக்குள் அதிகாரபூர்வமான தகவல்களை பகிர வாட்ஸ்அப், சிக்னல் மற்றும் டெலிகிராம் போன்ற இணையதளங்களுக்கு பதிலாக Swiss Threema என்ற மென்பொருளை பயன்படுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ராணுவ வீரர்களின் தரவுகள் பாதுகாக்கப்படுவதற்காக இந்த மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது என்று ராணுவ செய்தி தொடர்பாளர் கூறியிருக்கிறார்.