தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்படி நேற்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் இரவு ஊரடங்கு மற்றும் ஞாயிறு கிழமை ஊரடங்கின் போது போலீசாருக்கான வழிக்காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதில், விவசாய பொருட்கள், முட்டை, கறிக்கோழி போன்ற வாகனங்களை எக்காரணம் கொண்டும் தடை செய்யக்கூடாது. அவசர காரணங்களுக்காக வெளியூர் செல்வோர், பணி முடிந்து சொந்த ஊர் திரும்புவார், கிராமப்புறங்களில் விவசாயிகள் விவசாயப்பணிக்காக செல்வதை அனுமதிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.