பாஜக அமைச்சர், பாதுகாப்பு காரணமாக குடும்பத்தினரை இழந்த சோனியா காந்திக்கு, அதன் வலி தெரியும், அவர், பிரதமர் பாதுகாப்பு தொடர்பில் விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி, கடந்த புதன்கிழமை அன்று பஞ்சாப் மாநிலத்தில் நடக்க இருந்த கூட்டத்தில் கலந்துகொண்டு 42,750 கோடி ரூபாய் மதிப்புடைய திட்டங்களை துவக்கி வைக்க வந்தார். எனினும், பாதுகாப்பு பிரச்சனையால் பிரதமர், பயணத்தை ரத்து செய்து டெல்லி புறப்பட்டார்.
இந்நிலையில், மத்திய பிரதேசத்தின் பாஜக தலைவர், பிரதமருக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டது, தொடர்பில் காங்கிரஸ் தலைவியான சோனியா காந்தி விளக்கம் தர வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.
மத்திய பிரதேசத்தின், உள்துறை அமைச்சரான நரோட்டம் மிஸ்ரா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, “பாதுகாப்பு பிரச்சனையால், காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி அவரின் குடும்பத்தினரை இழந்திருக்கிறார். அவருக்கு அதன் வலி நன்கு தெரிந்திருக்கும். எனவே, பஞ்சாப்பில், பிரதமர் மோடியின் பாதுகாப்பு பிரச்சனை தொடர்பில் அவர் விரிவாக விளக்கம் தர வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.