Categories
உலக செய்திகள்

“இந்த வருடத்தின் ஆரம்பமே சரியில்ல!”….. ஆஸ்திரேலிய நடிகையின் பரிதாப நிலை……!!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒரு நடிகை, இந்த 2022-ஆம் வருடம் எனக்கு சிறப்பாக இல்லை என்று தெரிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த அல்லி சிம்ப்சன் என்ற நடிகை, ஆழமில்லாத ஒரு குளத்தில் டைவ்  அடித்திருக்கிறார். அப்போது, அவரின் கழுத்துப்பகுதியில் பயங்கரமாக அடிப்பட்டது. இதனால், அவரின் கழுத்து உடைந்தது. எனவே, தற்போது, குயின்ஸ்லாந்து நகரில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து, அவர் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, “நான் தற்போது உயிரோடு இருப்பதே அதிர்ஷ்டம் தான், இன்னும் 4 மாதங்கள் நான் கழுத்தில் பெல்ட் அணிய வேண்டும். இந்த 2022-ஆம் வருடத்தின் ஆரம்பமே எனக்கு சிறப்பாக இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |