கும்பராசி அன்பர்களே…!! இன்று வருமானம் உங்களுக்கு நல்லபடியாக வந்து சேரும். வசதிகளைப் பெருக்கிக் கொள்ள முன்வருவீர்கள். வெளியூர் பயணத்தால் அனுகூலம் ஏற்படும். உடல் நலத்தில் அக்கறை காட்டுவது ரொம்ப நல்லது. வாய்ப்புகள் வாயில் தேடி வரக்கூடும். இன்று கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். வழக்குகளில் சாதகமான போக்கு இருக்கும். நிலம் வீடு சம்பந்தமாக எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகள் நல்ல முடிவாக இருக்க கூடும். நிதானமாக பேசி செய்யும் காரியங்களில் வெற்றியைக் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல் பணவரவு இன்று தாராளமாகவே இருக்கும். பெரியோர்களின் ஆலோசனையும் கிடைக்கும். ஆசியும் கிடைக்கும்.
இன்று கணவன் மனைவியைப் பொறுத்தவரை எந்தவித பிரச்சினையும் இல்லை, அன்பாகவே காணப்படுவீர்கள். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை இன்று நீங்கள் வாங்க கூடும். இல்லம் செழித்து வளரும் நாளாக இன்று இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றத்தை பெறக்கூடும். ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், சக மாணவர்களின் ஒத்துழைப்பும் இருக்கும். நீங்கள் எடுக்கக்கூடிய முயற்சி அனைத்துமே எல்லா விஷயங்களுமே இன்று உங்களுக்கு நல்லபடியாகவே இருக்கும். இருந்தாலும் முக்கியமாக நீங்கள் செய்ய வேண்டிய விஷயம் யாருக்கும் கடன்களும் வாக்குறுதிகளையும் நீங்கள் இன்று கொடுக்க வேண்டாம்.
இதில் மட்டும் நீங்கள் ரொம்ப கவனமாக இருங்கள். அதே போல வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லுங்கள். இதை நீங்கள் கடைப்பிடித்தாலே ரொம்ப முக்கியமானதாக இருக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சூரிய பகவான் வழிபாட்டையும், சிவபெருமான் வழிபாட்டையும் நீங்கள் மேற்கொண்டு காரியத்தை செய்யுங்கள். அனைத்துக் காரியமும் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்