Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“பழுதடைந்த சாலையே காரணம்” தொழிலாளியின் மீது சரிந்து விழுந்த மூட்டைகள்…. அதிகாரிகளின் பேச்சுவார்த்தை…!!

குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள பாலக்கரை அருகில் இருக்கும் முதலியார் சத்திரத்தில் ரயில்வே குட்ஷெட் அமைந்துள்ளது. இங்கு சரக்கு ரயிலில் இருந்து மக்காச்சோளம், நெல், கோதுமை போன்ற மூட்டைகளை தொழிலாளர்கள் லாரிகளில் ஏற்றி அனுப்புவர். இந்த பகுதியில் இருக்கும் சாலை குண்டும், குழியுமாக காணப்படுவதால் லாரியில் ஏற்றப்படும் மூட்டைகள் சரிந்து கீழே விழுவது வாடிக்கையாக உள்ளது. எனவே குண்டும், குழியுமாக இருக்கும் சாலையை சீரமைக்க வலியுறுத்தி தொழிலாளர்கள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று மதியம் நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு சேதமடைந்த சாலை வழியாக லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் நடந்து சென்ற சுமைதூக்கும் தொழிலாளியின் மீது லாரியில் இருந்து 15 மூட்டைகள் சரிந்து விழுந்துவிட்டது. இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக மூட்டைகளை அகற்றி அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் கோபமடைந்த லாரி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், சுமைதூக்கும் தொழிலாளர்கள் போன்ற இணைந்து திருச்சி பாலக்கரையில் மேலப்புதூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்த பிறகு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |