Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நெருக்கமாக இருக்கும் புகைப்படம்…. மனைவியை மிரட்டிய கணவர்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி மனைவியை மிரட்டிய குற்றத்திற்காக கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கணியூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய வாலிபருக்கும், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனியை சேர்ந்த இளம்பெண்ணுக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கிடையே குடும்ப பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த இளம்பெண் பழனி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில் எனது கணவர் விவாகரத்து கேட்டு என்னை தொந்தரவு செய்கிறார். மேலும் அவருடன் நான் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வலைதளத்தில் வெளியிடுவதாக கூறி என்னை மிரட்டுகிறார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பெண் மனுவில் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இளம்பெண்ணின் கணவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துவிட்டனர்.

Categories

Tech |