மருத்துவ படிப்பில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டில் ஓரிரு நாளில் இறுதி உத்தரவு பிறப்பிக்க வாய்ப்புள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் கடந்த 3-ஆம் தேதி அன்று நடந்த விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் மருத்துவ பட்டப் படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓ.பி.சி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு அறிவிக்கை செல்லும். மேலும் மருத்துவ மேற்படிப்பு கவுன்சிலிங் நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து ஓ.பி.சி பிரிவினருக்கு 8 லட்சம் ரூபாய் ஆண்டு வருமான வரையறை நடப்புக் கல்வி ஆண்டுக்கு மட்டும் செல்லும். மருத்துவப் படிப்பில் உயர்ஜாதி ஏழையினருக்கான இட ஒதுக்கீடு குறித்து மார்ச் 3-வது வாரம் விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்றும், தமிழக அரசு திமுக தரப்பு வாதங்களை ஏற்றும் உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.