Categories
அரசியல் மாநில செய்திகள்

பிரதமரின் பயணம் இரத்து… வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம்… எம்.பி ஜோதிமணி ட்விட்…!!

சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்ற போது, தீடிரென நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக நிகழ்ச்சி இரத்து செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதே போல பிரதமர் மோடி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாமலே பாதியில்  திரும்பி சென்றதால் காங்கிரஸ் கட்சி மீது பாஜகவினர் கடும் அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

இந்த நிலையில் தமிழகம் வர இருந்த பிரதமர் மோடியின் பயணமும் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனாவால் இந்த அறிவிப்பு என மத்திய அரசு விளக்கம் அளித்தாலும், காங்கிரஸ் கட்சியை சார்ந்த பலரும் மோடியின் பயணம் இரத்து செய்யப்பட்டதை விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து எம்.பி ஜோதிமணி தனது ட்விட்டர் பதிவில், வந்த பிறகு எதிர்நின்று திரும்பிப்போக வைப்பது ஒரு விதம். வராமலே தடுத்து நிறுத்துவது இன்னொருவிதம். தமிழகம் இரண்டாவது பெருமையை தட்டிச்செல்கிறது! அந்த பயம் இருக்கட்டும்! என விமர்சனம் செய்து ட்விட் செய்துள்ளார்.

Categories

Tech |