கனடா, பிரிட்டன், ஸ்வீடன் மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகள் இணைந்து உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரத்தில் ஈரான் நாட்டை எதிர்த்து நடவடிக்கை மேற்கொள்வோம் என்று உறுதியளித்திருக்கிறது.
கடந்த 2020 ஆம் வருடம், ஜனவரி மாதத்தில் உக்ரைன் நாட்டின் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது. இதில் 176 மக்கள் பரிதாபமாக பலியாகினர். இதில் அதிகமானோர் கனடா, பிரிட்டன் ஸ்வீடன் மற்றும் உக்ரைன் நாடுகளை சேர்ந்தவர்கள். எனவே, குறிப்பிட்ட இந்த நாடுகள், ஈரான் அரசிடம் இழப்பீடு தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு ஒருங்கிணைப்பு குழுவை உருவாக்கியது.
தற்போது இந்த ஒருங்கிணைப்பு குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில் கடந்த இரண்டு வருடங்களாக எங்களது சிறப்பான முயற்சி மற்றும் பேச்சுவார்த்தைகளினால், இந்த பிரச்சனையை தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டோம். எனினும், ஈரான் நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனின்றி போனது. எனவே, இந்த குழு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்க தீர்மானித்திருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.