Categories
Uncategorized உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

சுவையான சுவையான பாதாம் கேக் செய்ய தயாரா …!!

                                                         சுவையான பாதாம் கேக்

 

  தேவையான பொருட்கள்

மைதா 200 கிராம்

பாதாம்பருப்பு 25 கிராம்

பேக்கிங் பவுடர் 2 டீஸ்பூன்

முட்டை 2

வெண்ணை 150 கிராம்

பாதாம் எசன்ஸ் சில துளிகள்

உலர்ந்த பழங்கள் 50 கிராம்

முந்திரி பருப்பு 25 கிராம்

மசாலாப் பவுடர் அரை டீஸ்பூன்

பால் ஒரு டேபிள்ஸ்பூன்

சர்க்கரை 200 கிராம்

Image result for பாதாம் கேக்

செய்முறை

பாதாம் பருப்பை சூடான நீரில் ஊற்றி வைத்து தோலுரித்து, பால் விட்டு நன்கு அரைத்துக்கொள்ளுங்கள் .மாவுடன் பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு சலிக்கவும் . பின் வெண்ணெயுடன் சர்க்கரை சேர்த்து லேசாகும் வரை குழைக்கவும் முட்டையை உடைத்து ஊற்றி நுரைக்க அடிக்கவும் மாவுடன் வெண்ணெய் சர்க்கரை குழைத்த கலவை முட்டை இவற்றை பொதுவாக ஊற்றி கலக்கவும் . கலக்கும் போதே பாதாம் எசன்ஸ் கேக் மசாலா பவுடர் பாதாம் பருப்பு அரைத்த முந்திரி பருப்பு துண்டுகள் மாவில் புரட்டி எடுத்து உலர்ந்த பழ துண்டுகள் இவற்றை சேர்க்கவும் கேக் கலவையை ட்ரேயில் ஊற்றி சூடாக்கிக் கொண்டு கேக் ஓவனில் வைத்து பேக் செய்யவும் .

 இப்போது சுவையான பாதாம் கேக் ரெடி

Categories

Tech |