Categories
தேனி மாவட்ட செய்திகள்

அலட்சியமாக இருக்காதீங்க…. இது மிகவும் ஆபத்தானது…. பொதுமக்களை எச்சரித்த ஆட்சியர்….!!

முககவசம் அணியாமல் வீதியில் உலா வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை கண்டித்து ஆட்சியர் முரளிதரன் முகக்கவசம் வழங்கியுள்ளார்.

இதனை தொடர்ந்து வியாபாரிகள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி செலுத்திகொள்ள வேண்டும் என அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் தமிழக அரசு சார்பில் பல்வேறு நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதால் பொதுமக்களும் தங்களது ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என கூறிய ஆட்சியர் முககவசம் அணியாதவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |