ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல இளம் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. சமீபத்தில் இவர் நடிப்பில் போட்டியில் வெளியான திரைப்படம்” ஓ மணப்பெண்ணே”. இந்த படத்தில் கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.
இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இயக்குனர் சசி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக சித்தி இத்நானி நடிக்க உள்ளார். இவர் சிம்பு நடிக்கும் ”வெந்து தணிந்தது காடு” படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
A #Sasi directorial.
Updates coming shortly …Welcome to #Kollywood you sweet girl @SiddhiIdnani May you shine bright always 🤗❤️ pic.twitter.com/DXuzEUlKiu
— Harish Kalyan (@iamharishkalyan) January 6, 2022