இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் திரையரங்குகளில் 50 சதவிகித இருக்கைகளுக்கு மட்டுமே அரசு அனுமதி அளித்துள்ளது. இவ்வாறு இருக்க கொரோனா பரவல் மேலும் அதிகரித்து வருவதால் திரையரங்குகள் மூடப்படலாம் என்று செய்திகள் பரவி வருகின்றன. இந்த செய்தி ஒட்டுமொத்த சினிமா உலகையும் கலங்க வைத்துள்ளது.
இதையடுத்து அஜித் குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கல் பண்டிகையில் திரைக்கு வரும் என்று ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாகும் என்றும் தெரிவித்தனர். இந்நிலையில், அஜித்குமாரின் வலிமை திரைப்படம் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.