கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே கீழையூரில் உள்ள பழமை வாய்ந்த வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று இரவு புகுந்த மர்ம நபர்கள் ஜன்னல் கம்பிகளை அறுத்து கோவிலில் உள்பகுதிக்குள் நுழைந்துள்ளனர் .பின்னர் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்த கொள்ளையர்கள் அங்குள்ள 4 உண்டியல்களின் பூட்டை உடைத்து அதிலிருந்து சுமார் 3 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றிருக்கிறார்கள். காலையில் வழக்கம்போல் கோவிலை திறக்க வந்த பூசாரி இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார் . தகவலின் பேரில் திருக்கோவிலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்