விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஐயம்மாள் என்பவர் வசித்துவருகிறார். இவரின் கணவர் இறந்துவிட்டார். இவருக்கு பவித்ரா என்ற மகள் உள்ளார். தற்போது பவித்ரா கோவில்பட்டியில் தனியார் ஹோட்டலில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் பட்டாசு ஆலைக்கு வேலைக்கு சென்ற ஐயம்மாள் வெடி விபத்தில் படுகாயமடைந்த நிலையில் அவரை கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு வெண்டிலட்டர் வசதி இல்லை என்று கூறிய நிர்வாகம் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளது. இதையடுத்து அரசு ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை விரைந்த நிலையில் ஆம்புலன்ஸ் ஓட்டுனர் 60 கி.மீ வேகத்தில் செல்ல வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனால் மருத்துவமனை வாசலிலேயே ஐய்யம்மாள் உயிரிழந்தார். தந்தை தாய் இழந்த பவித்ரா நிர்க்கதியாக நிற்கிறார். இதற்கு அரசு மருத்துவமனை தான் காரணம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர்.