மருமகனை தாக்கிய குற்றத்திற்காக மாமனார் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள வீலிநாயக்கன்பட்டி பகுதியில் கூலி தொழிலாளியான வேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புவனேஸ்வரி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறில் கோபமடைந்த புவனேஸ்வரி தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனையடுத்து புவனேஸ்வரியை வீட்டிற்கு அழைத்து வருவதற்காக வேல் தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு புவனேஸ்வரியின் தந்தை அழகர்சாமி, சகோதரர்கள் முருகவேல், கோபாலகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து வேலை கம்பத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்துள்ளனர். இதுகுறித்து வேல் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அழகர்சாமி, கோபாலகிருஷ்ணன், முருகன் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.