தமிழகத்தில் டாஸ்மாக் பார் டெண்டர்கள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் 2530 டாஸ்மாக் பார்களுக்கு டெண்டர் முடிந்துவிட்டதாகவும் 8 மாவட்டங்களில் மட்டும் சில காரணங்களுக்காக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசு கூறியுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளில் உள்ள பார்களில் தின்பண்டங்கள் விற்பது மற்றும் காலி பாட்டில்கள் சேகரிப்பது தொடர்பான டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த டெண்டரை எதிர்த்து டாஸ்மார்க் பார் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
ஏற்கனவே பார் வைத்திருப்பவர்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படவில்லை எனக் கூறி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் அனைவருக்கும் விண்ணப்பங்கள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் அரசு சார்பில் ஆஜராகி இதுவரை தமிழகத்தில் 2530 பார்களுக்கு டெண்டர்கள் இறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் 8 மாவட்டங்களில் மட்டுமே சில காரணங்களுக்காக ஒத்திவைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார். இதனையடுத்து நீதிபதி முந்தைய கால டெண்டர் படிவத்தையும் தற்போதுள்ள டெண்டர் படிவத்தையும் மற்றும் நிபந்தனைகள் குறித்த விவரத்தையும் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்டு நாளை மறுநாளுக்கு வழக்கை ஒத்திவைத்தார்.