மதுபோதையில் இருந்த பெயிண்டர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் புதுசத்திரத்தை அடுத்துள்ள உடுப்பும் கொவசம்பட்டி பகுதியில் இருதயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். பெயிண்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கலங்காணி-திருமலைப்பட்டி சாலையில் இருந்த கிணற்றின் சுற்றுசுவர் மீது அமர்ந்து மது குடித்துள்ளார். அப்போது மதுபோதை அதிகமாகி கிணற்றில் தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் இருதயராஜின் உடலை மீட்டு உடற்கூராவிற்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இருதயராஜ் மகன் பிரான்சிஸ் அளித்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.