Categories
அரசியல் மாநில செய்திகள்

“இரத்தத்திலும் ஜாதி ரத்தம் தான் கேப்பீங்களா?”…. எங்கேயும் சாதி…. சித்தராமையா ஆதங்கம்….!!!!

நேற்று முன்தினம் கர்நாடக சவிதா சமூகம் சார்பில் பெங்களூருவில் நடைபெற்ற ‘நான் சுயமரியாதைக்காரன்’ என்ற புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா சாதிகளால் புரையோடி போய் இருக்கும் தீண்டாமையை வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் நோயாளிகளுக்கு மருத்துவமனையில் அறுவை சிகிச்சையின் போது உறவினர்கள் அல்லது குடும்பத்தினரின் ரத்தம் மட்டுமே தேவை என்று மருத்துவர்கள் கேட்பதில்லை.

அதேபோல் எந்த சாதிக்காரர் எனக்கு ரத்தம் கொடுத்தார் என்றும் நாம் கேட்டதில்லை. எனவே ஜாதிகள் இருக்கும் வரை நாம் அனைவரும் மனிதனாக வாழ்வது கடினம் என்று கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் கர்நாடகாவில் ஜாதியை ஒழிக்க 12-வது நூற்றாண்டில் அரும்பாடுபட்ட பசவண்ணர் கூறியதுபோல் தாழ்ந்த ஜாதி, உயர்ந்த ஜாதி என்று எதுவும் இல்லை.

கர்நாடகாவில் கல்வியறிவு பெற்றவர்கள் 78 சதவீதம் பேர் உள்ளனர். இருப்பினும் ஜாதிகள் மட்டும் குறையவே இல்லை. அதேபோல் படித்தவர்களால் தான் தற்போது அதிக ஏமாற்று வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று ஆதங்கமாக பேசியுள்ளார்.

Categories

Tech |