இங்கிலாந்தை சேர்ந்த செவிலியர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 28 நாட்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் கோமாவில் இருந்த நிலையில் அவருக்கு மருத்துவர்கள் அதிகளவு வயாக்ரா மருந்தை கொடுத்துள்ளார்கள்.
இங்கிலாந்தில் மோனிக்கா அல்மெய்டா என்பவர் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த நவம்பர் 9 ஆம் தேதி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் மோனிக்கா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன்பின்பு அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதையடுத்து மோனக்காவின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து மோனிக்காவை மருத்துவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்துள்ளார்கள்.
அங்கு அவர் 28 நாட்களுக்கும் மேலாக கோமாவில் இருந்து தீவிர சிகிச்சை பெற்றுள்ளார். இந்நிலையில் தான் மருத்துவர்கள் மோனிக்காவிற்கு அதிகளவு வயாக்ரா மருந்தை கொடுத்துள்ளார்கள்.
இந்த மருந்தை சாப்பிட்ட மோனிக்காவின் உடம்பில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து அவர் கிறிஸ்மஸ் நாளன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்.