சீனாவில் கயிறு தாண்டும் போட்டியில் மாணவர்களின் முயற்சி நாட்டையே பிரம்மிக்க வைத்துள்ளது.
சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் ஓன்று சேர்ந்து சீன கூடைப்பந்து மைதானம் ஒன்றில் 2 குழுக்களாக பிரிந்து எதிரெதிர் பக்கங்களில் வளைவாக நின்றனர். எதிரெதிரே உள்ளவர்கள் கையில் உள்ள கயிறுகளை ஒரே நேரத்தில் சுழற்றினர்.
அதே நேரத்தில், நடுவில் இருக்கும் அந்த கயிற்றில் மாணவர் ஒருவர் கூட சிக்காமல் சுலபமாக மேலே உயரமாய் குதித்து தப்பிக்கின்றார். மாணவர் ஒரே சமயத்தில் ஏராளமான கயிறுகளில் இருந்து தப்பிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. தற்போது, இந்த வீடியோ சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது