நாடு முழுவதும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4,862 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 9 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் இனி வரும் நாட்களில் அதிக அளவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை, செங்கல்பட்டு மற்றும் வேலூர் உள்ளிட்ட பகுதிகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் அச்சமடைய வேண்டாம். கொரோனாவை பொறுத்தவரை தொற்று சங்கிலியை தடை செய்யவே ஊரடங்கு கட்டுப்பாடுகள் அனைத்தும் மேற்கொள்ளப்படுகிறது என்று கூறியுள்ளார்.