பாஜகவின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து அமைச்சர் வெளியேறியது கட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்காள சட்டசபை தேர்தலுக்கு பின்பு பாஜகவின் நிலைமை மிகவும் மோசமாகிவிட்டது. இந்நிலையில் மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூர் மேற்கு வங்காள பாஜகவினரின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறியுள்ளார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மதுவா சமூகத்தை சேர்ந்த தாகூர் கடந்த ஐந்தாம் தேதி வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வெளியேறியுள்ளார். இதனைத்தொடர்ந்து பாஜகவை சேர்ந்த ஐந்து எம்எல்ஏக்களுடன் அவர் தனது வீட்டில் ஆலோசனை நடத்தியுள்ளார்.
இது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இதுகுறித்து தாகூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், மதுவா சமூகத்தினர் தேவையில்லை என பாஜகவினர் நினைக்கின்றனர். எனவும் மேலும் மதுவா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் கடந்த சில நாட்களுக்கு முன்பு மேற்கு வங்காள கட்சி நிர்வாகிகள் மாற்றப்பட்டனர். அப்போது மதுவா சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.ஆனால் அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனாலேயே அவர் அதிருப்தி அடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.