குடியுரிமை சட்டம் இந்திய குடிமகனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு பகுதியில் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல் டெல்லி ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் தீவீரமான போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். நேற்று முன்தினம் பல்கலைக் கழக வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தின் போது, காவலர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக இருபுறம் இருந்து கல்லெறித்தாக்குதல் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து இந்த தாக்குதலை கண்டித்தும் மசோதாவுக்கு எதிராகவும் தமிழகம் உட்பட பல்வேறு இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது இதுகுறித்து காங்கிரஸ் உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் மத்திய அரசு (பாஜக) மீது தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில் ஜார்க்கண்ட் மாநிலம் பார்ஹித்தில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, சில கட்சிகள், சமூக விரோதிகள் மாணவர்களை தூண்டி விடுகின்றனர். கல்லூரி மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்துங்கள். நாங்கள் உங்கள் கூற்றை கேட்கிறோம் என்றார். மேலும் எதிர்க்கட்சிகள் கொரில்லா அரசியலை நிறுத்த வேண்டும். அரசியல் அமைப்பு சட்டம் தான் எங்களது புனிதப் புத்தகம். பாகிஸ்தான் குடிமக்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமை தர காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு தைரியம் இருக்கிறதா? என்றும், பாகிஸ்தான் மக்கள் அனைவருக்கும் குடியுரிமை தர தயார் என வெளிப்படையாக கூற வேண்டும் என்று சவால் விட்டார்.
தொடர்ந்து பேசிய அவர், . காஷ்மீர் 370 ஆவது சட்டப்பிரிவை காங்கிரஸ் மீண்டும் கொண்டு வந்து விடும். இந்திய இஸ்லாமிய சமூக காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பொய்களை கூறுகின்றனர். குடியுரிமை சட்டம் இந்திய குடிமகனுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்தார்.