மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மில்லர்புரம் பகுதியில் சுப்பிரமணியன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் இருக்கும் சூப்பர் மார்க்கெட் அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். அதன் பின் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் திருடு போனதை அறிந்து சுப்பிரமணியன் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து சுப்பிரமணியன் மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை திருடிய மர்ம நபர் குறித்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் புதியம்புத்தூர் பகுதியில் காவல்துறையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபரை காவல்துறையினர் நிறுத்தி விசாரித்த போது அவர் உசிலம்பட்டியை சேர்ந்த பெரியராமர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த வாலிபர் சுப்பிரமணியனின் மோட்டார் சைக்கிளை திருடி வந்ததாக காவல்துறையினரிடம் ஒப்புக்கொண்டுள்ளார். அதன் பின் காவல்துறையினர் பெரியராமரை கைது செய்துள்ளனர். மேலும் காவல்துறையினர் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.