கடைகளில் விற்பனை செய்த புகையிலை கலந்த உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வ.உ.சி மார்க்கெட் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவு பொருட்களை விற்பனை செய்ததாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் மாரியப்பன், காளிமுத்து போன்றோர் மார்க்கெட் பகுதியில் இருக்கும் கடைகளில் தீவிர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது 2 கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை கலந்த உணவுப் பொருட்களை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுமார் 20 கிலோ உணவு பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். மேலும் அந்த கடையின் உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழை தற்காலிகமாக ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.