மோட்டோரோலா நிறுவனம், புதிய மோட்டோ ஜி71 5ஜி (Moto G71 5G) ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது வெளியாகும் என்ற தேதியை அறிவித்துள்ளது.
மோட்டோரோலா நிறுவனம் தயாரித்துள்ள மோட்டோ ஜி71 5ஜி ஸ்மார்ட்போன் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகும் என்று அறிவித்துள்ளது.. இதற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு 2021 நவம்பர் மாத வாக்கில் சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த புதிய ஸ்மார்ட்போனில் 6.43 இன்ச் எப்.ஹெச்.டி. பிளஸ் ஒ.எல்.இ.டி. ஸ்கிரீன், ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர், 50 M.P . பிரைமரி கேமரா மற்றும் 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

மோட்டோ ஜி71 5ஜி போனின் சிறப்பு அம்சங்கள் :
- 6.43 இன்ச் 1080×2400 பிக்சல் புல் HD பிளஸ் OLED டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்
- அட்ரினோ (Adreno) 619L G.P.U
- 6 ஜி.பி ரேம், 128 G.P மெமரி
- மெமரியை மேலும் நீட்டிக்கும் வசதி
- இரட்டை சிம் ஸ்லாட்
- 50 M.P பிரைமரி கேமரா
- 8 M.P கேமரா
- 2 M.P கேமரா
- 16 M.P செல்ஃபி கேமரா
- கைரேகை சென்சார்
- 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், டால்பி அட்மாஸ்
- நீர் எதிர்ப்பு வசதி (Water resistant facility)
- 5G, டூயல் 4ஜி வோல்ட்இ, புளூடூத்
- 5000 mAh.பேட்டரி
- 30 வாட்ஸ் டர்போ சார்ஜிங்