தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் மருத்துவ நிபுணர்களுடன் கடந்த இரண்டு நாட்களாக ஆலோசனை நடத்தி வந்தார். அந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவது மற்றும் பள்ளிகள் மூடுவது குறித்த கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்தி சற்றுமுன் தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி,
ஞாயிறு தவிர மற்ற நாட்களில் உணவகங்கள் ,பேக்கரிகளில் 50% வாடிக்கையாளர்கள் அமர்ந்து உண்ண அனுமதி.
ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சலூன்கள், பியூட்டி பார்லர்களில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
ஞாயிறு தவிர மற்ற நாட்களில் கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்களில் 50% வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
ஞாயிறு தவிர மற்ற நாட்களில் இசை, நாடகம், கருத்தரங்கம் உள்ளிட்ட உள்ளரங்க நிகழ்ச்சிகளில் 50% பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.
ஞாயிறு தவிர மற்ற நாட்களில் ஜிம்கள் உள்ளிட்ட உடற்பயிற்சி கூடங்கள் 50% வாடிக்கையாளர்களுடன் மட்டுமே இயங்க வேண்டும்.