சட்டவிரோதமாக11 மூட்டை ரேஷன் அரிசி கடத்தி வந்த ஆட்டோ ஓட்டுனரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சோமநாதபுரம் பகுதியில் குடிமைப்பொருள் வழங்கல் குற்ற பிரிவு காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை காவல்துறையினர் நிறுத்தி சோதனை செய்துள்ளனர். அந்த சோதனையில் 495 கிலோ எடை உள்ள ரேஷன் அரிசியை 13 மூட்டைகளில் கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து ஆட்டோ ஓட்டுநரான சங்கரபாண்டி என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 13 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்து நுகர்பொருள் வாணிபக் கழகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.