தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் அடிக்கடி சிறைப்பிடிக்கப்பட்டு வருவது வழக்கமாகவே மாறிவிட்டது. அந்த வகையில் ராமநாதபுரம் மண்டபம் பகுதியிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் 19-ஆம் தேதி மீன்பிடிக்க 2 விசைப் படகுகளில் சென்ற மீனவர்கள் 13 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்தது.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த வழக்கை விசாரித்த மன்னார் மாவட்ட நீதிபதி, அவர்களை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார்.