Categories
தேசிய செய்திகள்

குன்னூர் விமான விபத்துக்கு காரணம் இதோ…. முப்படைகளின் விசாரணை அறிக்கை தாக்கல்….!!

குன்னூர் ராணுவ ஹெலிகாப்டர் விபத்து குறித்து முப்படைகளின் முழு விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குன்னூர் அருகே கடந்த டிசம்பர் 8-ஆம் தேதி விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியது. இதில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ரனாவத் உட்பட 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து குறித்து விமானப்படை அதிகாரி மானவேந்தரசிங் தலைமையிலான தனிப்படை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் இந்த விபத்து தொடர்பான முப்படைகளின் முழு விசாரணை அறிக்கையை மந்திரி ராஜ்நாத் சிங்கிடம் அளிக்கப்பட்டுள்ளது. மேகக் கூட்டங்கள் அதிகமாக இருந்தது தான் இந்த விபத்துக்கு காரணம் எனவும்,இதனால் தான் விமானம் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு விபத்துக்குள்ளாகி இருக்கிறது எனவும் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |