Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. டோக்கன் கிடைக்காதவர்களுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்…!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.இந்த திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார். ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு 200 டோக்கன் வரை ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் டோக்கன் வாங்க தவறியவர்கள் மற்றும் டோக்கனில் உள்ள தேதியில் பொருட்கள் வாங்க முடியாதவர்கள் வருகின்ற 10ஆம் தேதிக்கு மேல் ரேஷன் கடைக்கு சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் ஏதாவது விடுபட்டிருந்தால் புகார் அளிக்கலாம் என்று கூட்டுறவு துறை அறிவித்திருந்தது.

Categories

Tech |