Categories
மாநில செய்திகள்

“முதலமைச்சருக்கு புகழாரம்”….. தமிழ்நாட்டின் உறுதி…. ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?…..!!!!

தமிழகத்தில் சட்டப்பேரவை கூட்டத் தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. அதில் உரையாற்றிய ஆளுநர்,

தமிழகத்தில் கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களில் உள்ள முதல்வர்களில் சிறந்த முதல்வராக ஸ்டாலின் இருக்கிறார்.

எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை உறுதி செய்ய அரசு விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கை தமிழர் நலனுக்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

முல்லைப் பெரியாறு அணையில் பல ஆண்டுகளுக்குப் பிறகு 142 அடிக்கு நீர் தேக்கப்பட்டு உள்ளது. விரைவில் 152 அடிக்கு நீர் தேக்கப்படும். மேலும் மேகதாது அணை கட்டும் திட்டம் தடுத்து நிறுத்தப்படும்.

இருமொழிக் கொள்கையில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. முதல் மொழியாக தமிழ்,இரண்டாவது மொழியாக ஆங்கிலமும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்.

உயர் கல்வி பாடத்திட்டங்கள் மேம்படுத்தப்படும். மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வழங்கப்படும்.

ஒரகடத்தில் 150 ஏக்கர் மருத்துவப் பூங்கா அமைக்கப்படும். தூத்துக்குடியில் 1100 ஏக்கரில் பர்னிச்சர் பூங்காவை முதல்வர் விரைவில் தொடங்கி வைப்பார். இதன்மூலம் 3 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்தியா முழுவதும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவுகிறது. இருப்பினும் தமிழகத்தில் தடையில்லா மின்சாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

சென்னையில் 500 கோடி செலவில் சிங்காரச் சென்னை திட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.

குடிசைகள் இல்லாத தமிழகத்தை ஏற்படுத்துவதே முதலமைச்சரின் கனவாகும். வருகின்ற பத்தாண்டுகளில் குடிசைகள் இல்லாத தமிழகம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது.

கோவில் நிலங்களை பாதுகாப்பதில் அரசு நடவடிக்கை சிறப்பாக உள்ளது. தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் புத்தக நிலையங்கள் அமைக்கப்படும் அதுமட்டுமில்லாமல் கோவில்களில் தல வரலாறு புத்தகங்களாக வெளிப்படும்.

நீட் தேர்வு வேண்டாம் என்பதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. முதலமைச்சரின் முயற்சியால் மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சிலம்பம் விளையாட்டு வீரர்களுக்கு அரசு பணிகளில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. பாராலிம்பிக்கில் வெள்ளி வென்ற மாரியப்பன் தங்கவேலுக்கு தமிழக அரசு ரூ.2 கோடி ஊக்கத்தொகை மற்றும் அரசு பணி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகள் 33,117 நபர்கள் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர்.

சமீபத்தில் ஆங்கில நாளிதழ் நடத்திய ஆய்வில், சிறந்த முதலமைச்சராக நமது முதலமைச்சர் தேர்வாகியுள்ளார். ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களிலேயே இப்பெயரை முதலமைச்சர் பெற்றிருப்பது பெருமைக்குரியது என ஆர்.என். ரவி புகழாரம்

குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கொள்கைகள் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது

தெற்காசியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக, தமிழ்நாடு அரசு திகழ்கிறது.

ஒமிக்ரான் பரிசோதனை நடத்தும் ஆய்வகம் முதலில் அமைந்தது தமிழ்நாட்டில்தான்..

இலங்கை சிறையில் உள்ள 68 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

GST வருவாய் இழப்பை ஈடுகட்ட ஒன்றிய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய ஒன்றிய அரசு தேசிய பேரிடர் நிவாரண நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும்.

ஜனவரி 12ம் தேதி உலகத்தமிழ் நாளாக கொண்டாடப்படும்.

அரசின் இலவச பேருந்துகளில் கடந்த 4 மாதங்களில் 61% அளவிற்கு மகளிர் பயணம் செய்துள்ளனர்.

பொங்கல் வாழ்த்து கூறி தனது 42 நிமிட உரை ஆளுநர் ஆர். என் ரவி நிறைவு செய்தார்.

Categories

Tech |