Categories
மாநில செய்திகள்

“இலங்கை தமிழரின் வாழ்வாதாரம் மேம்படுத்தும் திட்டம்”….. ஆளுநர் அதிரடி….!!!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர் இலங்கை தமிழர் நலனுக்காக அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல் இலங்கை தமிழரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காகவும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |