Categories
அரசியல்

எதுக்கு புதுசு புதுசா…? இருக்கிறதே போதும்…. இழுத்து மூடுங்க…. ராமதாஸ் அதிரடி….!!!!

தமிழகத்தில் புதிதாக பார்களை திறக்க பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் புதிதாக பார்கள் திறக்க கூடாது எனவும் ஏற்கனவே உள்ள பார்களை மூட வேண்டுமெனவும் பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார் . இதுதொடர்பாக அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது, தற்போது பார் டெண்டர் தொடர்பாக நிறைய பிரச்சினைகள் எழுந்து வருகின்றன எனவும் இப்போது புதிதாக பார்கள் திறக்கப்பட வேண்டுமா எனவும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டாஸ்மார்க் கடைகளில் உள்ள பார்களில் காலி பாட்டில்களை எடுப்பது தின்பண்டங்களுக்கான கடைகள் அமைப்பது போன்றவைகளுக்கான டெண்டர் நடைபெற்றது.

இந்த டெண்டருக்காண உரிமம் வழங்குவதில் பெரும் முறைகேடு ஏற்பட்டுள்ளதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதில் ஒரு தரப்பினர் அமைச்சரின் வீட்டு முன்பு நின்று போராட்டம் நடத்தினர். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாட்டில் 7 ஆயிரத்திற்கும் அதிகமான டாஸ்மாக் கடைகள் இருந்து வந்தன. பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து நடந்த போராட்டத்தால் அவற்றின் எண்ணிக்கை கணிசமான அளவு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது அவற்றுடன் 1551 பார்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. இந்த பார்கள் அனைத்தும் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்தவையாகும். இந்த சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் பார்களை மூடுவதே நல்ல அரசின் தலையாய கடமை.

ஸ்டாலின் வெற்றிபெற்றால் மதுவிலக்கை அமல்படுத்துவதாக கூறினார். ஆனால் பொறுப்பேற்று இத்தனை நாட்களுக்கு பிறகு டெண்டரில் ஊழல் நடந்துள்ளதே ஸ்டாலின் ஆட்சியின் அடையாளம் என அவர் கூறியுள்ளார். முழுமையான மதுவிலக்கை ஏற்படுத்தவே அரசு முழு முயற்சியுடன் செயல்பட வேண்டுமே தவிர இவ்வாறு பார்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது நாட்டிற்கு நல்லதல்ல என அவர் கூறினார்.

Categories

Tech |