Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

திருமணமான 4 மாதத்தில்…. புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள அம்மாபாளையம் கிராமத்தில் ருத்ரன் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 4 மாதங்களுக்கு முன்பு ருத்ரனுக்கு மோனிகா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு ருத்ரன் மாமனார் வீட்டிலேயே வீட்டோடு மாப்பிள்ளையாக மோனிகாவுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த மோனிகா வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

இதனை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தவர்கள் உடனடியாக மோனிகாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மோனிகா பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து வழக்குப்பதிவு காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |