Categories
உலக செய்திகள்

சூடானில் வெடித்த கலவரம்…. 2 பேர் உயிரிழப்பு…. ராஜினாமா செய்த பிரதமர்….!!

சூடானில் மக்கள் ஆர்ப்பாட்டம் கலவரமாக வெடித்ததில் பிரதமர் அப்தல்லா ஹம்டோக், பதவி விலகியுள்ளார்.

சூடான் நாட்டில் கடந்த அக்டோபர் மாதம் 25ஆம் தேதி அன்று நாட்டின் ராணுவம், இடைக்கால ஆட்சியைக் கவிழ்த்து அவசர நிலை பிரகடனம் செய்தது. மேலும், பிரதமர், அப்தல்லா ஹம்டோக்வை வீட்டில் சிறை வைத்தனர். இதனை கடுமையாக எதிர்த்து, மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதன் பலனாக, பிரதமர் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் பதவியில் அமர்ந்தார். ஆனால், அவர் ராணுவத்துடன் இணைந்து அதிகாரப்பகிர்விற்கு ஒப்பந்தம் செய்தார். இதனை எதிர்த்த மக்கள், வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும், அவர்கள், “மக்களாட்சி வேண்டும்” என்று முழக்கமிட்டனர்.

எனவே மக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில் இரண்டு நபர்கள் உயிரிழந்தனர். இதனால், பிரதமர் பதவி விலகுவதாக அறிவித்தார். தற்போது நாடு மீண்டும் ராணுவத்தின் கட்டுப்பாட்டிற்கு வந்திருக்கிறது.

Categories

Tech |