Categories
மாநில செய்திகள்

சென்னை பல்கலைக்கழகம்…. அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை…. நீதிமன்றம் அதிரடி….!!!!

சென்னை பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். இது 1851- ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது. இது இந்தியாவின் பழமையான பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். லண்டன் பல்கலைக்கழகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இது, செப்டம்பர் 5 ஆம் தேதி 1857-இல் இந்திய சட்டமன்றத்தின் கீழ் இணைக்கப்பட்டது. மேலும் மருத்துவம், பொறியியல், சட்டம், அறிவியல், கலை முதலிய அனைத்து துறைகளும் இதில் இருக்கிறது. நீண்ட காலம் தமிழகத்தின் ஒரே பல்கலைக்கழகமாக விளங்கியது.

இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகம் தற்போது அதன் பெயரை இழந்து வருவதாக சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெறுவதை பெருமையாக சொன்ன காலம் போய், அதே பெருமை தற்போது நீடிக்கிறதா? என்று கேள்வி எழுப்பியுள்ளது. பல்கலைக்கழகத்தில் நேர்மை, அர்ப்பணிப்பு சேவையை பேணி காக்காத அதிகாரிகளுக்கு அதிகபட்ச தண்டனை விதிக்கவும், பொறுப்பற்ற அதிகாரிகளை பணி நீக்கம் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |