பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்த சினேகாவின் புகைப்படம் வைரலாகி வருகிறது
தமிழ் திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் சினேகா. இவரை மக்கள் ”புன்னகை அரசி” என்றும் அழைத்தனர். இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இவர் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் புதிய நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்நிலையில், சினேகா தனது குடும்பத்துடன் பழனிக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அப்போது ரசிகர்களில் பலர் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுத்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.