சேதமடைந்துள்ள பாலத்தை சரி செய்ய கோரி பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆத்தங்கரைப்பட்டி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடுத்பத்தினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் உள்ள தரை பாலம் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் பாலம் நீருக்குள் மூழ்கியது. இதனால் பாலத்தை பயன்படுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்படுக்கின்றனர்.
மேலும் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் அவதியடைந்து உள்ளனர். இதனால் தரை பாலத்தை அகற்றி உயர்மட்ட பாலம் அமைத்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.