நடிகர் ரஜினிகாந்த் நிறைமாத கர்ப்பிணியான தனது ரசிகைக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கி அவரது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேனியை சேர்ந்தவர் ராகவா விக்னேஷ் – ஜெகதீஸ்வரி. இவர்கள் ரஜினியின் தீவிர ரசிகர்களாவர்.இந்நிலையில் கர்ப்பமாக இருந்த தன் மனைவியிடம், அவரது ஆசையை ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ஜெகதீஸ்வரி ரஜினியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் . இதனால் 4வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்காக நேரம் கேட்க முயன்றுள்ளார் ராகவா விக்னேஷ்.
இதனை அறிந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்க்கு தம்பதியரை வரவழைத்து சந்தித்துள்ளார்.மேலும் நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரிக்கு வளையல் அணிவித்து விட்டு ஆசி வழங்கியுள்ளார்.